×

வெலிமட கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், தனது கணவருடன் அம்பகஸ்தோவ பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில், வகுப்பறை தரையில் இலைகள் கிடந்தமை தொடர்பில் மாணவர்களிடம் விசாரித்த பிரதி அதிபர், குறித்த மாணவியை12 வயதுடைய 7ஆம் தர மாணவியை துடைப்பத்தின் கைப்பிடி மற்றும் மரக்கட்டைகளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவி வெலிமட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், சரணடைந்த பிரதி அதிபர் வெலிமட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2 இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115