×

 நிக்கவெரட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பிக்குவெனக் கூறிக்கொண்டு, கொஸ்கம பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று பொருட்கள் மற்றும் பணத்தைச் சேகரித்து வந்த போலி காவியுடை தரித்த நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு கொஸ்கம பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த நபர் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளாகச் சேகரிக்கும் பொருட்கள் மற்றும் ஏனைய பொருள்களை மாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த போலி காவியுடை தரித்த நபரின் நடவடிக்கைகள் அல்லது அவர் நடமாடும் இடங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115