×

ஒன்பது மாதக் குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் வயிற்றை நாற்காலியில் கட்டி, குடையின் கைப்பிடியாலும் கைகளாலும் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா ஜூலை 3ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.  சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார், பேட்டை, பெஸ்டியன் மாவத்தையை சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்தபோது, சிறுமியை நாற்காலியில் கட்டிப்போட்டு, இரும்புக் கம்பி மற்றும் கையால் கடுமையாகத் துன்புறுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்தபோது, சிறுமியை நாற்காலியில் கட்டிப்போட்டு, இரும்புக் கம்பி மற்றும் கையால் கடுமையாகத் துன்புறுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து, பத்தும் அனுருத்த என்ற வேலையில்லாதவரை மணந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு, வேலை தேடும் நோக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு அக்குழந்தையுடன் கொழும்புக்கு சென்றுள்ளார். அங்கு, குழந்தையின் தந்தை, தாயையும் குழந்தையையும் இந்த சந்தேக நபரின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலை தேடிச் சென்றுள்ளார். மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியும் அவர் திரும்பவில்லை. இந்நிலையிலேயே, தாக்குதலில் காயமடைந்த குழந்தை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபரை மேலும் காவலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அங்கு, குழந்தையின் தந்தை, தாயையும் குழந்தையையும் இந்த சந்தேக நபரின் பொறுப்பில் விட்டுவிட்டு வேலை தேடிச் சென்றுள்ளார். மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியும் அவர் திரும்பவில்லை. இந்நிலையிலேயே, தாக்குதலில் காயமடைந்த குழந்தை தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சந்தேக நபரை மேலும் காவலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115