வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் 'ஆம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (28.07.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவுரை, நாளை (29.07.2026) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடபட்டுள்ளது.
தீவிரமான தென்மேற்குப் பருவமழை நிலவுவதால், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் எதிர்கால அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.