×

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.


இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


​போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.


ஆற்று நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட ஹெலிகொப்டர்களால் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகின்றது.பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, எல்லையோரப் பகுதியான கியிரோங் எல்லைக் கடவையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115