×

ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்துக்களை ஈரான் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், அவரது இந்த அறிவிப்பை ஈரானியக் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி முற்றாக நிராகரித்துள்ளார்.ஈரானிய அரசுப் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான IRIB-க்கு அளித்துள்ள அதிகாரப்பூர்வ பேட்டியில், ஈரானின் கடற்படை எந்தவிதப் பாதிப்பும் இன்றி மிகவும் ஆரோக்கியமாகவும் முழு வலிமையோடும் தனது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.மேலும் தனது அறிக்கையில், "தாய்நாடான ஈரானைப் பாதுகாக்கவும், நமது மாபெரும் ஈரானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தவும் கடற்படை எவ்விதத் தயக்கமுமின்றி முழு ஆற்றலுடன் தொடர்ந்து செயலாற்றும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115