×

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் இணைந்து உருவாக்கிய வெசாக்கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினும் புனராய்வு பிரிவினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜேதச தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை   குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இதுவரையும் எமக்கு உத்தியோகபூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. எனினும் சமூக ஊடகங்கள் வாயிலாக முடிந்தவரையும் யாழ்பான பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் மாணவர்களையும் இந்த விசா கூட்டை மிகவும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி உள்ளார்கள். எனவே இந்த நல்லிணக்க முயற்சியை சீர்குழைப்பதற்காக ஏதேனும் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலா? இது குறித்து காவல் துறையினரும் புலனாய்வு பிரிவுரும்  தீவிரமாக இணைந்து பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள். இதொடர்பாக உத்தியோக விசாரணைகள் அறிக்கை கிடைத்தவுடன் மேலதிக விவரங்கள் ஊடகங்களுக்கு வெளியிட முடியும் என்று அவர் அறிவித்துள்ளார். 


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115