×
ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய 'எவர் லவ்லி' என்ற கப்பலை ஈரான் இராணுவம் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக இரண்டு மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலைத் தாக்குவதற்கு முன்பு ஒருவழித் தாக்குதல் ட்ரோன் ஒன்று அதன் மேற்குப் பக்கமாக நகர்ந்து சென்றது இது அந்தத் தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டது என்பதற்கான அறிகுறியாகும்.  இந்தத் தாக்குதலால் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தது, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115