×

னநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

நேற்று  (22) பிற்பகல் கத்தியுடன் ஆரச்சிக்கட்டுவ காவல்நிலையத்திற்கு வந்த நபர், தனது சகோதரனைக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.

அதன்படி, அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினர் சந்தேகநபர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று, சோதனை நடத்திய நிலையில், சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச்சிக்கட்டுவ - ராஜகதலுவ பகுதியைச் சேர்ந்த துலன் ஹசங்க என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனை, சந்தேக நபரே பகல் நேரத்தில் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115