×
விகாரமகாதேவி பூங்காவில் பதற்றமான சூழல்!

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பு - விகாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குமார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினரை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் அறிவிப்பதற்கு வந்த நிலையில் இந்த பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உத்தரவொன்றை காவல்துறையினர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


போராட்டக்காரர்கள் குழு அந்த இடத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும் நீதிமன்ற உத்தரவை வாசித்த பிறகு, காவல்துறைக் குழுவினர் அந்த இடத்தை சென்றுள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115