×

கிளிநொச்சி - யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (26) முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட காரை மோதித்தள்ளியுள்ளது.இதன்போது விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115