யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை அண்மித்த பகுதியில் நேற்றையதினம் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன. அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேய்ச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.