×
யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் மரணம்

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றிரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் காவல்துறையனர் நெறிப்படுத்தினர். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115