வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மற்றும் அபுதிதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இதன் பொது கருத்து வெளியிட்ட அமைச்சர், 'வடக்கு மாகாணத்தில் காவல்துறையின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது" என கூறியுள்ளார்.