×

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டிலும் அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய மறைகரம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, சி.டி. விக்ரமரத்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.இதனைதொடர்ந்து, அவர் 2020 நவம்பர் 25 அன்று காவல்துறை மா அதிபராக உறுதிப்படுத்தப்பட்டு, 2023 நவம்பர் 25 வரை இலங்கை காவல்துறையின் 35வது காவல்துறை மா அதிபாக பணியாற்றினார்.இவ்வாறானதொருபின்னணியில், அவர் 2023 மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், அக்காலத்தில் இருந்த அதிகாரிகள் பலமுறை அவரது சேவையை பல மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இது அக்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய முக்கிய புள்ளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115