×
மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (07.10.2026) இடம்பெற்ற இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்துக்கான காரணம் தொடர்பிலும், சம்பவம் தொடர்பிலும் திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115