×
முடிவுக்கு வந்த தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் -  நடந்தது என்ன..!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் தலைமையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி  இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலே கைவிடப்பட்டுள்ளதாக அவர் நேற்றையதினம்(25.10.2026) அறிவித்துள்ளார்.


மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய எழுத்துமூல ஆலோசனையின் அடிப்படையில் இந்த சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஞானசார தேரரின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் மகாநாயக்க தேரர்கள் தலையீடு செய்வதாக வழங்கிய உறுதியின் அடிப்படையில், தாம் முன்னெடுத்து வரும் இந்த சத்தியாக்கிரகத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாக உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.


சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கலைப்பதற்கான  நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மீண்டும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115