×
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தமது பெயரை சூட்டுமாறு கோரிய ட்ரம்ப்!

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு "டிரம்ப் பெருங்கடல்" எனப் பெயரிடுமாறு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையிடம் தான் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


பெருங்கடல்கள் பல நாடுகளுக்குப் பொதுவானவை என்பதால் அவற்றை வேறு பெயரிட்டு மாற்ற முடியாது என சுந்தர் பிச்சை வாதிட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


தென் கரோலினாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், கூகுள் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றுவது குறித்து சுந்தர் பிச்சையுடன் தான் நடத்திய உரையாடலை நினைவு கூர்ந்தார்.



‘நான் சுந்தரிடம், நான் அட்லாண்டிக் பெருங்கடலைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன், உங்களால் அதைச் செய்ய முடியுமா? என்று கேட்டேன்" எனினும், அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, "இல்லை, இல்லை, இல்லை. இந்த முறை நான் அதைச் செய்யப் போவதில்லை" என்று கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


பெருங்கடல்கள் பல நாடுகளை உள்ளடக்கியவை என்பதால் அத்தகைய மாற்றத்தைச் செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று கூகுள் தலைமை நிர்வாகி தமக்கு விளக்கமளித்ததாக ட்ரம்ப் கூறினார்.


"பெருங்கடல்கள் வேறுபட்டவை ஐயா. அவைகள் பல நாடுகளை உள்ளடக்கியது. தயவுசெய்து எங்களை அதைச் செய்யச் சொல்லாதீர்கள் என்று அவர் சுந்தர் பிச்சை கூறினார்" என ட்ரம்ப் குறிப்பிட்டுக் காட்டினார்.


இதனைத் தொடர்ந்து அந்த யோசனையைக் கைவிடுவதாகத் தெரிவித்த ட்ரம்ப், அட்லாண்டிக் பெருங்கடல் தனது தற்போதைய பெயரிலேயே தொடர வேண்டுமா என்று தனது பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.


மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்றும், ஒன்டாரியோ ஏரியை "அமெரிக்க ஏரி" என்றும் அமெரிக்க பயன்பாட்டிற்காக மறுபெயரிட ட்ரம்ப் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115