×

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷாலவை விடுவிக்குமாறு கூறி சில அரசியல் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் விமல் விரவன்சு உதய கம்பன்பில மற்றும் பெங்கமுவே நாலுக தேரர் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அதில் கருத தெரிவித்த ஞானசார தேரர் சுரேஷ் ஷாலவிற்கு எதிராக பேசுபவர் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மெல்கம் ரஞ்சித் ஸ்ரீல்ஹா காமினி ஆகியோரை விடுதலை புலிகள் அமைப்பினரோடு தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். இந்த கருத்துக்கள் இனவாதத்தை தூண்டுவதாக உள்ளது. மேலும் இலங்கையில் மட்டுமா குண்டுவெடித்தது. பல உலக நாடுகளிலும் குண்டுகள் வெடித்துள்ளது. ஆனால் அங்குள்ள அருட்தந்தியர்கள் யாரும் இவ்வாறு இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை தேடவில்லை என்று ஞானசாரத்திறர் குறிப்பெட்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115