×

போலி நாணய தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மிரிஹானவின் கோட்டை வீதி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து ஏழு போலி ரூ. 5,000 நோட்டுகள், ஆறு ரூ. 1,000 நோட்டுகள், ஒரு ரூ. 500 நோட்டு, ஒரு கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கைது செய்யப்பட்ட புறக்கோட்டையை சேர்ந்த 53 வயதான சந்தேக நபர், நேற்று (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115