×

வவுனியா- புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தானது நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் நேற்று மாலை பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115