இலங்கையில் பெரிய அளவிலான போதை பொருள் வர்த்தகரான ஷிஷான் பாசிக் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயின் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது அவர் கைது செய்யக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ஈரானிய போதை பொருள் வலையமைப்புடன் நேரடி தொடர்புகளை கொண்டிருப்பதனால் இவர் அமெரிக்காவுக்கு தேடப்படும் ஒரு நபராக விளங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன இவர் துபாயில் ஒரு பெருங்கோடீஸ்வரரை போல மறைந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன எவ்வாறாயினும் இவரது கைது குறித்து இலங்கைக்கு இதுவரை உத்தியோகூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது