முன்னாள் நீதிபதி விஜயதாச ராஜபக்ச தொடர்பில் அவரிடம் வழக்குக்காக சென்ற பெண் ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த பெண், "ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச எல்லோருக்கும் தெரிந்த வகையில் சிவில் வழக்குகளுக்கு மட்டுமே முன்னிலையாகி வந்தவர். ஆனால் நீதியமைச்சராக பதவியேற்ற பின்னர் குற்றவியல் வழக்குகளுக்கு (Criminal Cases) முன்னிலையானார்.
அவரின் அறையைப் (Chamber) பற்றி எந்தவொரு நீதிபதிக்கும் (Judge) தெரியும்.குற்றவியல் வழக்குகளைக் (Criminal Cases) கையாண்டதாக கேள்விப்பட்டதே இல்லை. அவர் குற்றவியல் பக்கம் செல்வதில்லை.
ஆனால், இவர் நீதி அமைச்சரானவுடன் இவரது அறை (Chamber) குற்றவியல் வழக்குகளைக் கையாளத் தொடங்கியது. புதிதாகப் படித்துவிட்டு இது நடக்கவில்லை.
நீதி அமைச்சர் என்ற பதவியை அவர்கள் பயன்படுத்தினர். தனது நீதி அமைச்சர் பதவிக்குரிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திதான் இவரது மகன் இந்த வேலைகளைச் செய்துள்ளார். ரகித முன்னிலையானது இந்த ஒரு வழக்குக்காக மட்டுமல்ல. இன்னும் வெளியில் வர வேண்டிய வழக்குகளின் வரிசை பெரிதாக உள்ளது. இவர்களை சிறைக்கு அனுப்புவது மட்டுமல்ல, இவர்களது கை, கால்கள் உடைந்து இடி விழுந்து சாக வேண்டும். தனது வழக்கொன்று பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டதாகவும், ஒரு வழக்குத் தவணைக்கு 7 இலட்சத்து ரூபா வீதம் பணம் வாங்கினர். தனது பல ஏக்கர் காணி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைக்காக, மூன்று வருடங்களாக நான் இடைக்கிடையே இவ்வாறு பணம் செலுத்தினேன். அதன் பின்னர், அந்த வழக்கை கைமாற்ற கதைத்த போது என்னிடம், நீதி அமைச்சரின் மகன்தான் பேசுகிறார், எந்தவொரு நீதிமன்றத்திற்கும் நீதி அமைச்சரின் அறையின் (Chamber) செல்வாக்கைப் பற்றித் தெரியும் தானே என்று இவ்வாறே இவர்கள் தங்களில் பதவியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.