×
நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து

கொழும்பில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்துச் சம்பவம் நேற்று  (26-06-2026) இரவு இடம்பெற்றுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட 31 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி சிலர் காயமடைந்துள்ளதாகத் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் மூன்று கார்களும் ஒன்றோடொன்று மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115