×

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை மையம், நாட்டின் பல பகுதிகளில் இன்று  (19) கடும் வெப்பமான வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.


நேற்று  (18) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை முழுவதும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், வெப்பக் குறியீடு (மனித உடல் உணரும் வெப்ப அளவு) எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலையை எட்டக்கூடும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.


இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நேரடி சூரிய ஒளியில் படுவதைத் இயன்றவரை குறைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115