×

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்ட இளைஞர் அரசியல் கட்சியொன்றில் முக்கிய பதவி வகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் அணியின் ஊடகச்செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு (27) மது விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஹக்குருவெலவை சேர்ந்த 30 வயதுடைய லஹிரு சுபுன் சிந்தகா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வீரகெட்டிய பிரதேச சபையில் போட்டியிட்டுள்ளார். இவர் களமெட்டிய மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தில் மேலாண்மை உதவியாளராகவும் பணியாற்றி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் ஹக்குருவெலவை சேர்ந்த 30 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயது சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115