சட்டபூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரெனப் பெரும் சொத்துக்களைப் பெற்று ஆடம்பரமான வாழ்க்கை வாழும் நபர்களைத் தாங்களும் குற்றப் புலனாய்வுத் துறையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத உடைமைகள் தொடர்பான விசாரணைகள் நாடு முழுவதும் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே சமூகத்தின் நலனுக்காகச் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.