×

கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட 12 சாரதிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (07.07.2026) இரவு வேளையில் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு,கிண்ணியாபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் எவ்வித அனுமதியும் இன்றி, சட்டவிரோதமான முறையில் இவர்கள் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 டிப்பர் வாகனங்களும் 05 உழவு இயந்திரங்களும் 05 கைப்பற்றப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் மண் ஏற்றப்பட்ட நிலையிலேயே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 12 சாரதிகளும் கிண்ணியா பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115