புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.