×

பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் நாடலமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்தனின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தனது இனத்தின் வரலாற்று வலிகளையும் இழப்புகளையும் மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஒரு இளைஞன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலைப்படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாக கருதி அதற்காக ஒரு இளைஞனின் சுதந்திரம் பறைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமை சவால்களின் தீவிரத்தையே எடுத்து காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115