×

அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்காக அதிவேகமாக அமைக்கப்பட்டு வரும் தரவு மையங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 125 இற்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த முறையில் பிரம்மாண்ட போராட்டங்களை நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களுக்காகத் தரவு மையங்களை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. இதனால் உள்ளூர் மக்களின் மின்கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, இந்த மையங்களின் குளிர்விப்புத் தேவைகளுக்காகப் பெருமளவிலான நன்னீர் வளங்கள் உறிஞ்சப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 'ஹியுமன்ஸ்ஃபர்ஸ்ட்' என்ற மக்கள் நல அமைப்பினால் இந்த நாடு தழுவிய போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115