ஜனாதிபதி அனரகுமார திசநாயக புதிய பாப்பரசர் 14ஆம் லியோவை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இந்த முறைப்படியான அழைப்பை அமைச்சர் பிமல் ரெட்நாயக பாப்பரசரிடம் வழங்கினார். அவர் மார்ச் மாதம் வத்திகானுக்கு பயணம் செய்து இந்த அழைப்பை ஒப்படைத்தார். பாப்பரசரின் உத்தேச வருகை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் பத்திகானுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை கத்தினால் மல்கம் ரஞ்சித் கையாண்டு வருகிறார். பாப்பரசரின் வருகைக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருவதே அனுர மற்றும் கருத்ததிநாள் இருவரின் நோக்கமாகும். அரசாங்கம் வத்திகானுக்கு அத்தகைய உறுதிமொழியை வழங்கியுள்ளதாக வத்திகான் வட்டாரங்கள் கூறுகின்றன. இதே வேளை விசாரணைகளில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக கருத்தினாள் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைகளின் விளைவாக கோட்டாபய ராஜபக்க்ஷ மீது வெளிநாட்டு பயணத்தடை ஒன்றை நீதிமன்றம் சமீபத்தில் விதித்தது. கருத்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஒருங்கிணைப்பின் மூலம் போப் பிரான்சிஸை இலங்கைக்கு வரவழைத்த அழைப்பிற்கு வழிவகுத்த கோட்டாபய தற்போது ஈஸ்ட் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது விதியின் ஒரு முரண்பாடான திருப்பம் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது