உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் வெளிப்படுத்தப்படுவார் என்று தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
குறிப்பிட்டுள்ளார். கம்பகா பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமான உண்மைகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் தொடர்பான உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதன் காரணமாகவே சுரேஷ் சாலவை சுற்றியுள்ள பலர் இன்று கவலையோடு காணப்படுகின்றனர். சுரேசாலை தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதற்கு திலீப பீரிஸ் நீதிமற்றில் ஆதாரங்களை சமர்ப்பித்து வருகிறார் என்றும் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.