×

திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (VAT) இன்வொய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வாய்ஸ் படிவத்தை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், வணிக சமூகத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் அமைப்புகளை தயார்படுத்திக் கொள்ள சலுகைக் காலம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வரி வசூல் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரி வலையமைப்பின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தும் நோக்கில் கடந்த மார்ச் 27ஆம் திகதி இந்த புதிய இன்வாய்ஸ் வடிவம் அறிவிக்கப்பட்டது. எனினும், இதற்காக நிறுவன மட்டத்தில் மென்பொருள் அமைப்புகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எதிர்வரும் அக்டோபர் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப தங்கள் கணக்கியல் மற்றும் பில்லிங் அமைப்புகளைத் தயார்படுத்தி கொள்ளுமாறு தொடர்புடைய வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போலி திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வாய்ஸ் படிவ பயன்பாட்டைத் தடுத்தல், பரிவர்த்தனைகள் குறித்து உரிய நேரத்தில் கண்காணிக்கும் திறன் மற்றும் வரி கசிவைக் குறைத்தல் ஆகியவை இதன் நோக்கமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115