×

திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி, இன்று இரவு மேலும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிய கனமழையுடனான சீரற்ற வானிலை, இன்று  (27.10.2026) அதிகாலை முதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை அதிகாலை முதல் மழை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில இடங்களில் மிதமான தூறல் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நாளை நண்பகலுக்குப் பின்னர் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தின் இறக்கண்டி முதல் தோப்பூர் வரையான பகுதிகளிலும், அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, உகன மற்றும் நமல்ஓயா பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாகாணத்தின் பல பகுதிகளில் நாளை மிதமானது முதல் ஓரளவு கனமழை வரை பெய்யக்கூடும்.

குறிப்பாக, காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதுடன், களுத்துறை மாவட்டத்தில் ஓரளவு கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தீவிர 'அர்னாப்' புயல், எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை அல்லது காலைப் பொழுதில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள காக்கிநாடா பகுதிக்கு அண்மையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரளவு கனமழை

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115