×

இந்தியாவின் தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் அங்குள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர். இலங்கையில் சுமார் 1000 கோடி ரூபாய் பெருமதியான முதலீடுகளை மேற்கொள்ள தென்னிந்திய முதலீட்டாளர் குழு ஒன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயஸ்தானிகர் கலாநிதி ஜி. கணேசநாதனின் முயற்சியால் தென்னிந்தியாவை சேர்ந்த தூதுக்குழு இலங்கை விஜயத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்த குழுவினர் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. தென்னிந்திய தூது குழுவினர் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவரட்னா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான முதலீட்டு ஒத்துழைப்புகளை வழிவகைகளை ஆராய்தல், வர்த்தக முதலீட்டு சூழல் பற்றி புரிந்துணர்வை ஏற்படுத்துதல் பரஸ்பர முக்கியத்துவம் மாய்ந்த துறைகளை கண்டறிதல் போன்றவை பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பலத்த சாப்தங்களின் பின்னர் திராவிட கட்சிகளை தோற்கடித்த முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமான நிலையில் இந்த முதலீட்டு வாய்ப்புகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115