×

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமியக் குடியரசை வழிநடத்திய அயதுல்லா அலி கமேனிக்கு  பிரமாண்டமான இறுதிச் சடங்னை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ஈரான் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்திய போரின் காரணமாக நீண்டகாலம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இதற்கான நேரம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும்,  இறுதிச் சடங்குக்கு தயாராவதற்காக ஒரு சிறப்பு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஊடக செய்திகள் விவரித்துள்ளன.

மேலும் பல்வேறு முகமைகள் தற்போது திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்று, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கான தெஹ்ரான் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மொஹ்சென் மஹ்மூதியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் முதல் அலையில் கொல்லப்பட்டார்.

அவருடைய மகனும் அவருக்குப் பின் வந்தவருமான மொஜ்தபா கமெனியும் இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தார்.

மேலும், அவர் பதவியேற்றதில் இருந்து பொதுவெளியில் காணப்படவில்லை. மூத்த கமெனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கை, போர் காரணமாக நடத்த முடியாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115