இங்கு சொல்லப்படுபவற்றை உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை
ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal