
1. ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
2. கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் சாய்ந்தமருது ஜே. எம். பாஸிதின் புகைப்படமும் தெரிவாகியுள்ளது.
கத்தார் சஃபாரி மால் நடாத்தும் “FRAMES SEASON 5” புகைப்படப் போட்டியில் இலங்கை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஜே. எம். பாஸிதின் புகைப்படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
4. கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (20) இரவு 11 மணி முதல் மறுநாள் காலை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. ரஷ்ய நாட்டில் 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மாருக்கு , ‘அன்னை நாயகி’ என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்பட்டு குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
6. மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
7. உணவு மற்றும் சுகாதார சேவைக்காக இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை ஊடாக குறித்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியின் ஊடாக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
8. இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
9. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் முட்டையொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது : அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
10. முட்டைக்கு நிர்ணய விலை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
11. தேசிய பட்டியல் மூலம் எம்பியாகிறார் கோட்டபாய.
12. பல்கலை அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம்.