
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.
“அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள் யாரென்றெல்லாம் எனக்கு தெரியாது. துரதிர்ஷ்டவசமாக அரசுக்கு எதிராக பேசுவதற்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள்.
மேலும் அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்திலும் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணிபுரிவதால் தங்களது வேலையை பாதுகாத்துகொள்ளவே முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் சில இளம் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள் வழங்கியுள்ளனர்.