
நைஜீரியாவில் பாரிய கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவில் உள்ள 4 கிராமங்களுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளைக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் 70பேர் கொல்லப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் உந்துருளிகளில்சென்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளனர்.
வீடுகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட்ட அனைவரையும் வீதிக்கு இழுத்து வந்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர், வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்
இந்த கொடூர தாக்குதலின் பின்னர் பல கிராம மக்கள் கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.