உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளனர்

சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யபடைகள் தாக்கியதைத் தொடர்ந்து சபோரிஜியாவில் இருந்த ஜூலியா என்பவர் தனது 11 வயது மகன் பிரேவ் ஹசனையாவது காப்பாற்ற வேண்டுமென கருதி அருகில் 750 மைல் தூரத்தில் உள்ள சுலோவாகியாவுக்குத் தனியாக அனுப்பி வைத்தார்.

ஹசன் தனது பாஸ்போர்ட், அம்மா எழுதி கொடுத்த கடிதம் மற்றும் கையின் பின்புறத்தில் எழுதப்பட்ட தொலைபேசி எண்ணுடன் 750 மைல்களுக்கு மேல் பயணம் செய்து சுலோவாக்கியா எல்லையை சென்றடைந்தார்.

அங்கிருந்த தன்னார்வலர்கள் திகைத்துப் போய் சிறுவன் வைத்து இருந்த கடிதத்தைப் படித்துவிட்டு, அவரது கையில் எழுதப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு, அவர்களது தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் உள்ள சிறுவனின் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அவனுக்கு உணவும் பானமும் கொடுத்த அவர்கள் சிறுவனின் துணிச்சலைப் பாராட்டினர்.

ஹசனின் அம்மா ஜூலியா, நான் ஒரு விதவை, எனது மகனைக் கவனித்து, எல்லையைக் கடக்க உதவிய சுலோவாக்கியா தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal