
இலங்கை கண் நன்கொடையாளர்கள் சங்கத்திற்கு கடந்த வருடம் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் 3355 வெளிநாட்டவர்களுக்கு பார்வை கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாத்தராராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 4540 பேர் கண் தானம் சங்கத்திற்கு கண் தானம் செய்துள்ளனர். அந்த கண்கள் மூலம் இலங்கையிலுள்ள 1185 பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கண் நன்கொடையாளர்கள் சங்கத்தின் தகவலுக்கமைய, கடந்த 60 வருடங்களில் இலங்கையர்களால் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் 83,994 வெளிநாட்டவர்கள் பார்வை பெற்றுள்ளதாக சிரேஷ்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Example Ad #2 (only visible for logged-in visitors)
அந்தக் காலப்பகுதியில் இந்த நாட்டில் 56,199 பேர் பார்வை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.