
மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிப்பது தவிர்க்க முடியாது என்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இதற்கான பொறிமுறை இன்றைய தினம் (15) அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இன்று முதல் இந்த மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் விரிவாக இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை களனிதிஸ்ஸ – சொஜிட்ஸ் மின்னுற்பத்தி நிலையம் இன்று காலை முதல் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.