ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக்கொலை செயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்சேக்கு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்படி சிறுவனின் தாயின் சகோதரி குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரி, கணவர் மற்றும் 10  வயது சிறுவன் என அனைவரும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளதுடன், 15 வயது மகன் மட்டும் உயிருடன் இருந்துள்ளான்.

அந்த சிறுவன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரனைக் கொன்றதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளான். இதையடுத்து அந்த பெண் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் 3 நாட்களாக அழுகிய சடலங்களுடன் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுவனை சட்டநடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறித்த சிறுவன், தான் பரீட்சையில் குறைவான புள்ளிகளை எடுத்தமைக்கு தண்டனையாக வீட்டில் கணினியை பயன்படுத்த பெற்றோர்  தடைவிதித்ததாகவும் அந்த விடயம் தொடர்பில் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளான்.

அதன் பிறகு தந்தையின் வேட்டை துப்பாக்கியைப் பயன்படுத்தி அவனது தாய், சகோதரன், தந்தை என 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளதாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal