பல வருடங்களாக மாத்தளை மாவட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்த, மருந்து கவர்களை தயாரிக்கும் திட்டமானது, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றார் சங்கம் தெரிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் அதிகளவான விசேட தேவையடைய பிள்ளைகள் இருப்பதுடன், இந்தப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காகவே, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அவர்களால் தயாரிக்கப்படும் மருந்து கவர்கள் மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலே, தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருக்கு பெற்றோர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் நிறுத்தப்பட்டதால் அதனை வாழ்வாதாரமாககொண்ட பலகுடும்பங்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.