முகத்தில் ஏற்படுவது போலவே தான் முதுகிலும் பருக்கள் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது.
சிவப்பு புடைப்புகள், ஒயிட்ஹெட்ஸ், பிளாக்ஹெட்ஸ் மற்றும் முடிச்சுகள் என்றும் வகைப்படுத்தி கூறுவார்கள். இது சிலருக்கு வலிமிகுந்ததாக இருக்கும்.
இதனை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டு நீக்க முடியும். தற்போது அவை எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
- 7 துளி டீ ட்ரீ எண்ணெய், தேங்காயெண்ணெய் – 1 டீஸ்பூன் இந்த கலவையை முதுகு முழுவதும் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து அப்படியே விட்டு மறுநாள் காலையில் கழுவவும். இதை அடிக்கடி செய்ய வேண்டும் குறைந்தது ஒரு வாரம் செய்து வந்தால் போதும்.
- தயிர் கெட்டியாக எடுத்து முதுகில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினசரி உணவில் தயிர் ஒரு கப் சேர்த்து வரவும்.
- ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ சேர்க்கவும். பிறகு 7 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும். டீ ஆறிய பிறகு பருத்தி துண்டை நனைத்து மெதுவாக முதுகு முழுவதும் துடைக்கவும்.பிறகு 20 நிமிடங்கள் வரை விட்டு பிறகு தண்ணீரில் கழுவி எடுக்கவும். தினமும் 2 அல்லது 3 முறை வரை செய்யலாம்.
- மஞ்சள் தூள் தண்ணீரில் குழைத்து ( தேவைக்கேற்ப) பேஸ்ட் ஆக்கி முதுகில் சமமாக தடவவும். பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பிறகு கழுவவும். தினமும் ஒரு முறை செய்யலாம்.

- அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பருத்தி உருண்டையை நனைத்து ஊறவிடவும். ஊறவைத்த பருத்தி பந்தை முதுகு முழுவதும் தடவி, முகப்பரு இருக்கும் இடங்களில் முக்கியமாக பயன்படுத்துங்கள். பிறகு 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து குளிக்கலாம். தினமும் பல முறை செய்து வரலாம்.
- பாதி அளவு எலுமிச்சையில் சாறு பிழிந்து தண்ணீரில் நீர்க்க செய்து அதில் பஞ்சு உருண்டையை நனைத்து முதுகு முழுவதும் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். தினமும் ஒரு முறை இதை செய்யலாம்.
- கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதை தடவி விடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். தினமும் 2 அல்லது 3 முறை இதை செய்து வரலாம்.