கனடா மாகாணமான அல்பர்ட்டாவில் அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வயது வந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களில் வரையறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வர்த்தக நிலையங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அரைவாசிக்கும் குறைக்கப்படுவதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் கடைகளில் அமர்ந்து உணவு உட்கொள்ளவும் பானங்கள் அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளினால் என்.எச்.எல் போட்டித் தொடர் மற்றும் உலக இளையோர் ஹொக்கிப் போட்டி என்பனவற்றை நடாத்துவதிலும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.