இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த ஆன்டனி அப்பாத்துரை (73 வயது) இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கோப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை காதலிப்பதாகக் கூறி, அவரது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இந்த முறைகேடான சம்பவத்திற்கா ஆன்டனி அப்பாத்துரை, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.