அதிமதுரம்

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உட்பட உலகில் உள்ள பலவிதமான மருத்துவ முறைகளில் ஓர் முக்கியமான மருத்துவ மூலிகையாக அதிமதுரம் விளங்குகிறது. நம் உடலுக்கு பல விதங்களில் நன்மை தரக்கூடிய ஓர் அற்புதமான மருத்துவ மூலிகை இந்த அதிமதுரம். ஆங்கில மொழியில் Liquorice என்ற பெயரில் அதிமதுரம் அழைக்கப்படுகிறது. அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra எனபதாகும். அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் அதிமதுரம் பொடியாகவே கிடைக்கிறது. இந்தப் பதிவில் நாம் அதிமதுரத்தின் பல மருத்துவ பயன்களில் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 

Athimathuram Benefits in Tamil

செரிமானம், வயிறு பிரச்சனைகள் :

செரிமானம் சீராக நடைபெற அதிமதுரம் மிகவும் உதவுகிறது. வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் உள்ளிட்ட பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த தீர்வாகவும் அதிமதுரம் விளங்குகிறது.

வாய் ஆரோக்கியம் :

உங்களது வாயின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அதிமதுரம் உதவுகிறது. பல் சொத்தை, ஈறு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், வாய்ப்புண் உள்ளிட்ட பலவிதமான வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அதிமதுரம் சிறந்த ஒரு தீர்வாக விளங்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தோல் நோய் குணமாக :

தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, சிரங்கு, படை, அரிப்பு உள்ளிட்ட பலவிதமான தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அதிமதுரம் விளங்குகிறது.

சுவாச பிரச்சனை தீர்வு :

பலவிதமான சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அதிமதுரம் விளங்குகிறது. குறிப்பாக ஆஸ்துமா, தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு அதிமதுர வேர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக திகழ்கிறது. இதுவும் அதிமதுரத்தின் மருத்துவ பயன்களில் (Athimathuram benefits) முக்கியமான ஒன்று.

கல்லீரல் நோய் :

அதிமதுரத்தில் Glycyrrhizic எனப்படும் அமிலம் உள்ளது. இது கல்லீரல் தொடர்பான நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க உதவுகிறது. எனவே உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிமதுரம் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

புற்றுநோய் வராமல் தடுக்க :

புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல் அதிமதுரத்தில் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்திடவும் அதிமதுரம் உதவக் கூடிய ஒன்றாக திகழ்கிறது.

உடல் எடை குறைய :

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அதிமதுரம் உதவக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. சில ஆராய்ச்சிகள் அதிமதுரம் உடல் எடையை குறைக்க பங்களிக்கிறது என்று கூறுகின்றன.

இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் (Athimathuram benefits in Tamil) அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களையும் பயனடையச் செய்யுங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal